நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட திறனை மேம்படுத்திக்கொள்ள எதிர்காலத்திற்கு தேவையான திறன்களை கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவராக இருந்தால் மிக சிறப்பு.
Artificial Intelligence என்பது செயற்கை நுண்ணறிவு மனிதர்கள் போலவே சிக்கல்களை தீர்க்கும் திறன் கொண்ட தொழில் நுட்பமாகும்.
நீங்கள் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தால் கல்வியறிவு மூலமாக மேன்மை அடையலாம்.
அந்த வகையான திறன்களை இலவசமாக ஆன்லைனில் எந்த இடத்தில் இருந்தும் எந்த நேரத்திலும் உங்கள் திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.
1. Artificial Intelligence ( AI )
இவை மனிதர்கள் போலவே வடிவங்கள் உருவங்களை அடையாளம் காணவும், விரிவான தகவல்களை சில நிமிடங்களில் உருவாக்கியும் தருகிறது.
இந்த திறனை படித்து அறிந்து கொள்வதனால் நல்ல வாய்ப்பு எதிர்காலத்தில் இந்த திறன் அடிப்படையில் பல வளர்ச்சிகள் இருக்கப் பல வகையில் வழிவகை செய்கிறது.
அனைத்து துறைகளிலும் AI தற்போது செயலாற்றி இருந்து கொண்டு வருகிறது.
படங்கள் உருவாக்குதல், வீடியோக்கள் உருவாக்குதல் இத்தகைய பணிகள் சில நிமிடங்களிலே விரைந்து முடித்துவிடுகிறது. இந்த செயலுக்கு Coding தெரியவதற்கு அவசியம் எதுவும் இல்லை.
HTML,CSS,JAVA மற்றும் PYTHON போன்ற படிப்புகளையும் படித்து விடுங்கள்.
செயற்கை நுண்ணறிவு புதியவர்களுக்கான மாத சம்பளம் ₹ 25,000 முதல் ₹ 65,000 வரை ஒரு ஆண்டுக்கு ₹ 3 லட்சம் முதல் ₹ 10 லட்சம் வரை கிடைக்கும். Indeed தரவு அடிப்படையில் சரிபார்த்து கொடுக்கப்பட்டுள்ளது.
2. Block Chain
Block Chain என்பது தொகுதிகள் ஆகும்.ஆர்டர் செய்த தரவுகளை விநியோகிக்கப்படும் லெட்ஜர் என்பதாகும்.
கிரிப்டோகரன்சியில் பிளாக் செயின் முக்கிய செயலாற்றுகிறது.அவற்றின் Road Map வடிவிலும் அளிக்கப்பட்டுள்ளது.
பிளாக் செயின் தொழில்நுட்பம் 2032 ஆம் ஆண்டு 1000 டிரில்லியன் டாலராக அதிகரிக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
பிளாக் செயின் ஆற்றல், நிதி நிறுவனம், சமூக ஊடகம் மற்றும் விற்பனை துறையில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
பிளாக் செயின் திறன் கொண்ட புதியவர்களின் Indeed தரவு அடிப்படையில் ₹ 41,000 முதல் ₹ 65000 வரை ஆண்டுக்கு 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும்.
இந்த திறனை Amazon, IBM போன்ற தளங்களில் படித்து அறிந்து கொள்ளுங்கள். அதன் மூலம் புரிதல் அடைய முடியும்.
3.Cloud Computing
Cloud Computing என்பது இணையத்தில் தரவுகளை சேமித்து வைக்கக்கூடியதாகும்.
இவை இணையத்தின் மூலமாக அறிக்கைகள் படங்கள் வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் இணைய வழியாகப் சேமித்து வைக்க முடியும்.
கிளவுட் கம்ப்யூட்டிங் செயல்படும் விதம், அவற்றின் வகைகள், சேவைகள் மற்றும் நன்மைகள் என்பதை Google மூலம் கற்றுக் கொள்ள முடியும்.
நம் நாட்டில் புதியவர்களுக்கு மாத சம்பளம் ₹ 40,000 முதல் ₹ 65,000 வரை ஒரு ஆண்டுக்கு 3 லட்சம் முதல் 5.5 லட்சம் சம்பளம் வரை கிடைக்கும் Indeed தரவு அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
கிளவுட் கம்ப்யூட்டிங் மூலம் தரவுகளை சேமித்து வைக்கும் துறைகள் : |
1. தகவல் தொழில்நுட்பத்துறை
2.சமூகம் மற்றும் ஊடகத்துறை
3.கல்வித்துறை மற்றும் விவசாயத்துறைகள்
4.நிதி மற்றும் காப்பீடு நிறுவனங்கள்
Microsoft Azure,Amazon Aws,IBM இந்த தளங்களில் கட்டுரை வடிவில் உள்ளதை கற்றுக் கொள்ளுங்கள்.
இந்தத் துறைகளில் தரவுகளை சேகரித்து, நிர்வகித்து மற்றும் செயல்படுத்தப்படுகிறது.
ஆகையால் கிளவுட் கம்ப்யூட்டிங் பயிற்சியினை இலவசமாக படித்து பயன் பெறுங்கள்.
Cloud Computing இலவச பயிற்சியினை பெற்று சான்றிதழ் பெற்றிடுங்கள்.
4.Data Analytics
Data Analytics என்பது தமிழில் தரவு பகுப்பாய்வு ஆகும்.மூலப்பொருளான தரவுகளை நுண்ணறிவுகளாக மாற்றுகிறது.
இந்த தரவை உபயோகப்படுத்துவதன் மூலம் சிக்கல்களை தீர்க்க பயன்படும் கருவிகள், செயல்முறை வரம்புகள் மற்றும் அதைச் சார்ந்த தொழில்நுட்பங்கள் அவை இதில் அடங்கும்.
AI,Block Chain மற்றும் Cloud Computing என்ற பிரிவை விட Data Analytics தற்போதைய தேவை அதிகமாக உள்ளது.
இவற்றில் புதிய பணியாளர்களுக்கு மாத சம்பளம் 25,000 முதல் 50,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
5.Data Science
Data Science என்பது வணிகத்திற்கு தேவையான
நுண்ணறிவுகளை பிரித்தெடுப்பது பற்றி படிப்பதாகும்.
இவற்றின் பங்களிப்பு தற்போது தகவல் தொழில்நுட்பத்துறையில் தரவுகளை சார்ந்து அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
தரவுகளை தானாக சேகரிக்க மற்றும் வரிசைப்படுத்த சில கருவிகள் பயன்படுகின்றன.
Google,Amazon Aws,IBM இந்த தளங்களில் கட்டுரை வடிவில் உள்ளதை கற்றுக் கொள்ளுங்கள்.
இந்த துறையின் வளர்ச்சி தினந்தோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
கல்வி,வங்கி, தொழில்சாலைகள், போக்குவரத்து மற்றும் நிதி நிறுவனங்களிலும் முக்கிய பங்காற்றுகிறது.
Data Science புதிய பணியாளர்களின் வருமானம், முதல் ஆண்டிற்க்கான சம்பளம் 41,000 முதல் 91000 வரை கிடைக்கும்.இந்த துறையின் கீழ் அனுபவம் அதிகரிப்பதன் மூலம் சம்பளமும் அதிகரிக்கும்.
6.Machine Learning
Machine Learning என்பது கடந்த கால அனுபவத்தின் மூலம் தரவுகளை கற்று கொண்டு எதிர்கால கணிப்புகளைச் செய்கிறது.
நிதி நிறுவனம், விளம்பரப்படுத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் செயல்பட்டுக் வருகிறது.
இயந்திர கற்றல் பணிக்கு புதிய பணியாளர்களாக இருந்தால் மாத வருமானம் 11 லட்சம் ஆண்டுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
7.UI / UX Design
UI என்பது பயனர் இடைமுகம் ஆகும்.இணையதளம்,மொபைல் ஆப்ஸ், தரையிறக்க பக்கம் போன்றவை திரைகளை வடிவமைக்கும் திறனாகும்.
இவற்றில் படைப்பு மூலம் தரம் வாய்ந்த வடிவமைப்புகளை உருவாக்கப்படுகின்றன.
தளத்தின் திரையில் லோகோ படங்கள்,வீடியோக்கள், எழுத்துக்கள், மற்றும் அனிமேஷன்கள் ஆகும்.
UX என்பது பயனர் அனுபவ வடிவமைப்பு ஆகும்.
பயனர் உங்களின் பொருள் அல்லது தயாரிப்பைக் தரையிறங்கும் பக்கத்தில் வடிவமைப்பு அனுபவங்களை பெறுவதாகும்.
தளங்களில் பக்க பிரிவுகள், இடுகைகள், வீடியோக்கள் மற்றும் பக்கங்களின் செயல்படும் விதத்தினை அறிந்து கொள்வதாகும்.
இந்தியாவில் புதிய பணியாளர்களுக்கு 16000 ஆரம்ப கால கட்டத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
8.Web Development
Web Development என்பது தளத்தை மேம்படுத்துதல் மற்றும் பராமரிப்பு செய்வதாகும்.
இவற்றில் இரண்டு பிரிவுகள் உள்ளன.
1.Front End Development
2.Back End Development
இந்த திறனுக்கு குறியீட்டு முறை அல்லது நிரலாக்கம் பற்றி தெரிந்திருந்தால் சற்று எளிதானது.
Python, CSS, JAVA, HTML, PHP மற்றும் Node.Js இந்த பாடங்களை கற்றுத் தெரிந்து இருந்தல் சிறந்த ஒன்றாகும்.
இந்தியாவில் 25,000 மாத வருமானம் கிடைக்கும். நகரம் மற்றும் அனுபவத்திற்கேற்ப சம்பளம் எதிர்காலத்தில் மாறுபாடு இருக்கலாம்.
Web Development திறன் நிறைந்த இலவசமாக ஆன்லைனில் பயிற்சியைக் சான்றிதழ் உடன்
கற்றுக்கொள்ளுங்கள்.
இந்த திறன்களை கற்றுக் சான்றிதழ் பெற்றுக்கொண்டு பல வேலைவாய்ப்புகளில் சேர்ந்து வளர்ச்சி அடையுங்கள்.
0 கருத்துகள்