நீங்கள் தொழில் மற்றும் பணியில் சிறந்த முதன்மை நிலையில் இருக்க தற்போதைய டிஜிட்டல் உலகில் தேவையான திறன்களில் நிபுணர் ஆக இருப்பது மூலம் பல நிறுவனங்களில் வாய்ப்புகள் எளிதாக மற்றும் நல்ல சம்பளத்துடன் கிடைக்கும்.
காலத்திற்கு ஏற்றார் போல் தன்னுடைய திறன்கள், பழக்கவழக்கங்கள், நடைமுறைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்பம், சூழல், வசதிகள் எதிர்காலத்தில் புதுமையானதாக மாறி இருக்கும்.அவற்றிற்கேற்ப நம்முடைய சுய மேம்பாட்டை மேம்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
கல்லூரி முடித்த மாணவர்களுக்கு எந்த துறையில் சேர்ந்து நல்ல எதிர்காலத்தை அடைய முடியும் என்ற குழப்பம் பலருக்கும் வரக்கூடும்.
ஆகையால் அந்த குழப்பத்தினை போக்குவதற்கு எதிர்காலத்தில் சிறந்த துறைகளின் விவரங்கள் மற்றும் விளக்கங்களை விவரிக்கப்பட்டுள்ளதை முழுமையாக படித்து பார்த்துக் கொள்ளுங்கள்.
எதிர்காலத்தில் சிறந்த துறைகள் எது ?
1. Software Developer
இன்று நாம் பயன்படுத்தும் Smartphones,Computers, Laptops, Tablets மற்றும் Point of Sale மெஷின்களில் மென்பொருள் மூலம் இயங்குகிறது.
இந்த மென்பொருள்கள் பெரும்பாலும் கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தமுடிகிறது.
இந்த மென்பொருள்களை உருவாக்குவது சாஃப்ட்வேர் டேவலப்பர்கள் ஆகும்.சாஃப்ட்வேரின் பயன்கள் இகாமர்ஸை நிர்வகிக்க, வாடிக்கையாளர்களின் தரவுகளை சேகரிக்க போன்றவற்றை சுலபமாக செய்ய முடியும்.
Software Developer திறனை கற்று Software Engineer, Systems Engineer, Applications Engineer மற்றும் Devops Engineer போன்ற பதவிகளுக்கு பொறுப்பேற்க முடியும்.
Software Development செய்வதற்கு Planning, Analysis, Design, Implementation, Testing & Integration, Maintenance போன்ற படிநிலைகள் செய்யப்படுகிறது.
பிரபலமான சாஃப்ட்வேர்கள் Google, TCS, Zoho, Microsoft, Salesforce, Amazon போன்ற நிறுவனங்களில் சாப்ட்வேர்களை பயனர் நட்புமுறையாக செய்து தரப்படுகிறது.
இந்த திறனை தெரிந்து கொள்வதன் மூலம் பல அரிய வாய்ப்புகளை நழுவவிடாதீர்கள்.
Software Developer பற்றி முழு குறிப்புகளையும் எளிதாக பதிவிறக்கம் செய்து அறிந்து கொள்ளுங்கள்.
2.Web Developer
நாம் பயன்படுத்தும் உலாவிகளில் நம்முடைய தேடல்கள், கேள்விகளுக்கான பதில்கள் கட்டுரை வடிவில் கிடைக்கும்.
இந்த தேடலுக்கு ஏற்ற தகவல்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு இணையதளங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
Google Web Pages 50 பில்லியனுக்கும் மேற்பட்ட வரை தளங்கள் இருக்கிறது.
இந்த வலைதளங்களின் மூலமாக அரசு நிறுவனங்களின் தகவல்கள் , தனியார் நிறுவன தயாரிப்பு மற்றும் சேவைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்க வழிவகுக்கும்.
Web Development செய்வதற்கு Html, Java, Css, Python, Javascript மற்றும் Sql என்ற Programming Languages போன்றவை தேவைப்படுகிறது.
Web Developer திறனை கற்று Front End Developer,Back End Developer,Full Stack Developer மற்றும் Web Master போன்ற பதவிகளுக்கு பொறுப்பேற்க முடியும்.
இந்த திறனை கற்றுக் கொள்வதினால் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியை செய்ய மற்றும் தொழிலையும் வழிநடுத்தவும் முடியும்.
Web Developer பற்றி ஆன்லைனில் தெரிந்து இலவச சான்றிதழ் பெற்றிடுங்கள்.
3.User Experience
இந்த துறைக்கு கற்பனை திறன் மற்றும் ஆர்வம் இருந்தால் இவற்றில் சிறப்பாக தனது பணியை செய்து முடிக்க முடியும்.
இந்த திறன் நவீன கால தயாரிப்பு தொழில்நுட்பம் இதன் மூலம் சேவைகளை வாடிக்கையாளர் தேவை பூர்த்தி செய்ய இவை பயன்படுகின்றன.
UX என்ற தொழில்நுட்பம் எந்த சேவை மற்றும் தயாரிப்புகளிலும் பயன்படுத்த முடியும்.
UX திறனை கற்று UX Information Architect,UX Specialist,UX Engineer மற்றும் Senior UX Designer போன்ற பிற பதவிகளுக்கு பொறுப்பேற்க முடியும்.
இந்த அரிய வாய்ப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த துறைகளில் சிறந்தவராக இருக்க வழிவகை செய்யுங்கள்.
UX Design பற்றி குறிப்புகள் மற்றும் விவரங்கள் பதிவிறக்கம் தெரிந்து கொள்ளுங்கள்.
UX இந்த திறனை கற்றுக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
4.Cyber Security
இது டிஜிட்டல் சாதனங்களான கணினி,மடிக்கணினிகள்,ஸ்மார்ட்போன்கள் பாதுகாக்கிறது.
ஆன்லைனில் நடக்கக்கூடிய மோசடிகள், தீம்பொருள் தாக்குதல், ஸ்பேம் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கிறது.
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் போலியான குறுஞ்செய்திகள்,ரொக்க பரிசு குப்பன்கள் போன்ற தகவல்களில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்.
இந்த குறுஞ்செய்தி எனக்கு RBI இடம் இருந்து வந்தது.நீங்களும் இவற்றை பின்பற்றுங்கள்.
Cyber security திறன் கற்றுக் கொள்ள இந்த மென்பொருட்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Linux, Python, Networking,C++ மற்றும் Social.Net போன்றவை பயன்படும்.
Cyber Security கற்றுக் கொள்வதன் மூலம் Cloud Engineer,Network Security Engineer, Cloud Consultant மற்றும் Identity Manager போன்ற பிற பதவிகளிலும் பொறுப்பேற்க முடியும்.
Cyber Security குறிப்புகள் மற்றும் விவரங்களை தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும்.
Google மூலம் Cyber Security எளிதாக கற்றுக் கொள்ளுங்கள்.
5.Block Chain
இது வணிகம் சார்ந்த மற்றும் வங்கிகளில் முக்கிய அங்கமாக பங்காற்றுகிறது.
பெரும்பால வணிகங்கள் தகவல்கள் அடிப்படையில் இயங்குகிறது. தகவல்கள் துல்லியமாக மற்றும் விரைவாகவும் பெற பிளாக் செயின் சிறந்த முறையில் பயன்படுத்த முடிகிறது.
பிளாக் செயின் நெட்வொர்க் ஆர்டர்கள் உற்பத்தி கணக்குகள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும்.
இதன் மூலம் அதிக பாதுகாப்பு சரியான சீரான துல்லியம் அதிக செல்திறன் மற்றும் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறது.
இந்த திறன் பலரும் கற்று கொள்வது கிடையாது.இவற்றின் தேவை டிஜிட்டல் உலகில் தேவை அதிகரிக்கக்கூடும்.ஆகையால் இந்த திறன் கற்றுக் கொள்ளுங்கள்.
Black Chain திறன் கற்றுக் கொள்ளவது மூலமாக Block Chain analyst, Blockchain Developer Blockchain Researcher, Blockchain Product Manager போன்ற பதவிகளில் தனியார் பொறுப்பேற்க முடியும்.
Block Chain பற்றி தகவல் மற்றும் குறிப்புகளை பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும்.
IBM மூலம் Block Chain செயல்படும் விதத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
முடிவுரை
இந்த கட்டுரையில் மூலம் சிறந்த திறன்களை கற்று அவற்றின் மூலம் நல்ல வேலை வாய்ப்புகளும் பெற்றிடவும் மற்றும் உங்களுடைய நண்பர்களுக்கும் இந்த திறனை மற்றும் இந்த கட்டுரையை அனுப்ப வேண்டும் அதன்பின் அவர்களும் வளர்ச்சி அடைதல் முடியும்.
நாம் வளர்ச்சி அடைவதோடு மட்டுமல்லாமல் பிறரையும் வளர்ச்சி அடைய செய்வது நம்முடைய நாட்டிற்கும் வளர்ச்சி அடைய வாய்ப்பாக இருக்கும்.
பிறருக்கு உதவுங்கள் ;
பிறர் நமக்கு உதவுவார்கள் !
- ஹேமநாத்.ம .
0 கருத்துகள்